பையனை எல்கேஜி சேர்த்திருக்கோம்.
எட்டு லட்சம்தான் பீஸ்.ஆனா டெய்லி ஹார்ஸ் ரைடிங் கோச்சிங் இருக்கு. கடவுள் புண்ணியத்துல எப்படியே சீட் கிடைச்சுருச்சு"
"பொண்ணு நல்லாருக்கா.பிப்த் ஸ்ட்ண்டார்டு போகப்போறா.. சம்மர் லீவுங்கறதால ஐஐடி கோச்சிங் க்ளாஸ் போய்ருக்கா"
"மனசே சரியில்லை சார். பையன் டென்த்ல 500 க்கு 498தான் எடுத்துருக்கான்.கடைசி நேரத்துல சிபிஎஸ்இல இருந்து ஸ்டேட் போர்டு மாறினதுல 2 மார்க் விட்டுட்டான்.வீட்ல எல்லாரும் அழுதுட்டு இருக்காங்க"
"பொண்ணா..இருக்கா சார். எவ்ளோ நம்பிக்கை வச்சோம். கடைசில 12த்ல 1193 தான் எடுத்தா.அதுக்கு பக்கத்து காலேஜ்ல பிஎஸ்சி பிசிக்ஸ் கூட கிடைக்கலை. இப்போ பிஏ ஹிஸ்டரிதான் படிக்கறா. நல்ல வரன் வந்தா சொல்லுங்க சார்"
சராசரி இந்திய குழந்தையோட life cycle இதான். இதுல விளையாட்டு, ஒலிம்பிக், பதக்கம்ங்கற வார்த்தைக்கு இடமே இருக்காது. திடீர்னு இந்தியா பதக்கம் வாங்கலை, செலக்ஷன் கமிட்டி சரியில்லை,ஒரே பாலிடிக்ஸ்னு பொலம்பினா கிடைச்சுருமா ??
பக்கத்து வீட்டு குழந்தை ஒலிம்பிக்ஸ்ல நிறைய தங்கம் வாங்கனும், நம்ம வீட்டு குழந்தை நல்லா படிச்சு கல்யாணத்துல நிறைய தங்கம் வாங்கனும்னு எல்லாரும் நினைச்சா இப்படித்தான். இருந்த எல்லா சட்டிகளையும் கழுதைமந்தை மாதிரி இன்ஜினியரிங் காலேஜ் அனுப்பிட்டு இப்போ அகப்பையோட டிவி முன்னாடி உக்காந்து என்னப்பா பண்றீங்க?
0 comments:
Post a Comment